Thursday, April 15, 2010

பையா-அப்டேட்ஸ்!

மு.கு:- லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல. போன வாரத்தில் ஒரு நாள் தன்யாவுடன் பையா சென்றபொழுது நடந்த சில சம்பவங்களையும், படத்தில் எனக்கு பிடிச்ச, பிடிக்காத சில விஷயங்களையும் சொல்ல போறேன்.

சர்டிபிகேட் போடுவதிலிருந்து படம் பார்த்து நீ...ண்ட காலம் ஆனதால், இந்த முறை படத்திற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்று நானும், தன்யாவும் சபதமிட்டோம். பிளான் பண்ண படியே, 6:20 ஷோவிற்கு 5:00 மணிக்கே ஆபீசிலிருந்து எஸ்கேப். அடித்துப்பிடித்து, ஒரு வோல்வோ பஸ்ஸில் ஏறினோம். பஸ் எடுத்தவுடன் ஒரு டவுட் வந்துச்சு. இது பஸ்ஸா இல்லை திருவாரூர் தேரான்னு. இறங்கி ஓடிடலமானு கூட நினைத்தோம். டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. நாம் ஓடினால் பிரட் டோஸ்ட் ஆகிவிடுமென்று பயந்து கம்மென்று பஸ்ஸில் உட்கார்ந்திருந்தோம். சரியாக 6:25 க்கு தியேட்டேர் முன் ஆஜர். தியேட்டேருக்குள் போவதற்குள் முதல் 15 நிமிடம் ஓடியிருந்தது. :(

*****

இண்டர்வெலில் பாப்கார்ன் வாங்கி தன்யாவுக்கு கொடுத்தேன். கார்த்தியை பார்த்து கொண்டே பாப்கார்னை கீழ கொட்டி என் வயித்தெரிச்சலையும் கொட்டிக்கிட்டா. அவளுடைய தண்டனையாக எனக்கு ஒரு இலவச பாப்கார்னும், சேவ் பூரியும் கிடைத்தது. :)

*****

படத்தில் பிடித்தது:
1) கார்த்தி: பருத்திவீரன், ஆ.ஒ raw look ல இருந்து, decent look க்கு மாறிய கார்த்தியை பார்க்கும்பொழுது மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. விஜய், சூர்யா அளவிற்கு சார்ம் இல்லேனாலும் பார்க்க நல்லா தான் இருக்கார். ஹி ஹி ஹி :) தமன்னாவை அவர் ரசிக்கும் சீன்ஸ் எல்லாம் ச்சோ ச்வீட். கார்த்தி, பிரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி இம்சை பண்ற சீன்ஸ் பாக்கும் போது, ஏனோ பதிவு போட்டு நான் உங்கள இம்சை பண்றது ஞாபகத்துக்கு வந்துச்சு. :)

2) தமன்னா: ப்பா. ஏஞ்சல் மாதிரி இருக்காங்க. படிக்காதவனில், மேக்-அப் போட்டு பிசாசுகுட்டி மாதிரி இருந்தாங்க. இதில் மிதமான மேக்-அப், mild colored dresses என்று அம்சமா இருக்காங்க. 'நம்ம எல்லாம் எப்போ தமன்னா மாதிரி ஆகுறது'னு யோசிச்சு பெருமூச்சு விட்டதுலே பாப்கார்ன் பறந்தது தான் மிச்சம். ஹ்ம்ம்ம்.

3) ஒளிப்பதிவு, பாடல்கள், லோகேஷன்ஸ்: சூப்பர் கூல் :). அதிலும் 'சுத்துதே சுத்துதே' பாட்டுலே வர்ற செட், simply superb. அந்த மாதிரி இடம் நிஜமா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு யோசிக்க வெச்சுது. அந்த பாடல் தொடங்கும்போது மேகமில்லாத நிலாவை காட்டி, போக போக மேகமூட்டமுடன் நிலாவை காட்டியது அற்புதம். மத்த பாடல்கள், லோகேஷன்ஸ்-chanceless.

படத்தில் பிடிக்காதது:
ஸ்டண்ட் கொரியோக்ராபி: ஸ்டண்ட் சீன் வந்தா 'ஆ'னு வாய பொளந்து பாக்குற பொண்ணு நான். பையாவில் ஸ்டண்ட் சீன் வந்த ஒடனே பாப்கார்ன ஒண்ணொண்ணா எண்ணி சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். அவ்ளோ போர்.

மத்தபடி படம் - குட்.

*****

ஆக, பையாவும் என்னோட 'மறக்க முடியாத படங்கள்' லிஸ்ட்லே சேர்ந்துருச்சு. :)

2 comments:

  1. ஓசிலே சேவ் பூரி கிடைச்சா எப்படி மறக்க முடியும்?

    பாட்டுதான் படம்.. 11.30(நைட்டுதாங்க)காட்சிக்கு போய் தூங்கிட்டு இருந்தேன்.. என் காதல் சொல்ல பாட்டு ஸ்டார் ஆகும்போது ஒரு பீட் வந்துச்சு பாருங்க.. ச்சே கேளுங்க.. அப்படியே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஏறுச்சு..

    தமன்னா.. சுனைனா கால் தூசுக்கு ஆவாதுங்க.. :)

    ReplyDelete