Wednesday, April 14, 2010

சித்திரை திருநாள்!

இன்று சித்திரை திருநாள்! கடந்த 4 வருடமாக ஒவ்வொரு சித்திரை திருநாளுக்கும் ஊருக்கு சென்று விடுவதால், ரூமில் பிரெண்ட்ஸோடு கொண்டாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இந்த வருடம், ஓர் இனிய அனுபவமாய் இருந்தது.

நேற்று, ஆபீசிலிருந்து வரும்பொழுதே தன்யா ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, பழக்கூடை எல்லாம் வாங்கி வந்தாள். அவள் வாங்கியதை என்னிடம் காட்டியபொழுது தான் கவனித்தேன் மாம்பழமும், பூவும் மிஸ்ஸிங். அதனால் அவளிடம்,

"பூ வாங்கலையா தன்ஸ்?"
"மறந்துட்டேன் ஆஷா"
"சரி, மாம்பழம்?"
"எனக்குத்தான் மாம்பழம் ஒத்துக்காதே, அதனால வாங்கல."
"உனக்குத்தான ஒத்துக்காது. எனக்கு ஒத்துக்கும் இல்லே?"
"மறந்துட்டேன் ஆஷா"

முறைத்தேன். வசீகராவில் விஜய், வடிவேலு முன் டைப் டைப்பாக முழிப்பது போல் முழியை மாற்றி காட்டினாள். "த பாரு. நீ சும்மா பார்த்தாலே சுருண்டுருவேன். இப்படியெல்லாம், டைப் டைப்பா முழிச்சு கொழந்தைக்கு பயங்காட்டாதே." என்று கூறி எஸ்ஸானேன்.

நல்லவேளை, இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், 'நள்ளிரவு' 5:00 மணிக்கு என்னை 'கனி' பார்க்க எழுப்பிவிட்டாள். கொட்டாவி விட்டுக்கொண்டே கண்ணாடி முன் வைத்திருந்த கனிக்கூடையை பார்த்துவிட்டு மறுபடியும் ப்ளாட்டானேன்.

தன்யா, அலங்காரம் செய்த கனிக்கூடை இதோ:


அனைவருக்கும், என் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்! :)

Saturday, April 10, 2010

நீங்களும் டோஸ்ட்மாஸ்டர் தான்!

மு.கு:- தலைப்ப பார்த்து, இது 'சரக்கு' பத்தின பதிவுன்னு நினைச்சிட வேண்டாம். இது முழுக்க முழுக்க, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (communication skills) பத்திய பதிவு. :)


இன்றைய நவீன யுகத்தில், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மிகவும் அத்தியாவசியமானது. Career-ல் முக்கிய பங்கு வகிக்கும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நம்மில் பலருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த எட்டாக்கனியை பறிக்க உதவும் ஒரு சிறு சாதனம் தான், 'டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்ஸ்'.

'டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல்.' எவ்வளவு பேர் இந்த பெயரை கேள்வி பட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. அதனால், ஒரு சின்ன முன்கதை சுருக்கம். டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல், ஒருவரின், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், பப்ளிக் ஸ்பீகிங் ஸ்கில்ஸ், மற்றும் லீடர்ஷிப் ஸ்கில்ஸ்-களை வளர்த்து கொள்ள உதவும் ஒரு non-profit organization. இது, உலகெங்கும் இருக்கும் கிளப்ஸ் மூலமாக இக்கலைகளை நமக்கு கற்று கொடுக்கிறது. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Toastmasters_International - க்கு செல்லவும்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்களை எங்கள் டீமிலும் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு புதன்கிழமை மதியம் 3:00 டு 3:30 இந்த செஷன்கள் நடக்கும். ஒவ்வொரு செஷனும்,

* 3 Prepared speeches
* 3 Impromptu (or) extempore speeches
* Feedback sessions

என்று மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். செஷனை நடத்த ஒரு MC (Master of Ceremony), இரண்டு நடுவர்கள், ஒரு டைமர், மற்றும் ஒரு ஃபில்லர் கவுன்ட்டர் இருப்பார்கள் (ஃபில்லர் - வார்த்தை வெளி வராத போது நாம் உபயோகிக்கும் சொற்கள். ஆங்கிலத்தில் - uh, ah, um, லைக் போன்ற சொற்கள்). இதில், நடுவர்களை தவிர மற்ற எல்லோரும் ரொடேஷன் முறையில் பங்கெடுப்பர். ஒரு Prepared speech 3 நிமிடத்திற்கும், ஒரு impromptu speech 1 நிமிடத்திற்கும் நடக்கும். மீதி நேரத்தில், audience feedback மற்றும் நடுவர்களின் கமெண்ட்ஸ் கேட்கப்படும்.

பலர் குழுவில் இருக்கும் பொழுது நன்றாக பேசுவார்கள். ஸ்டேஜ் அல்லது போடியமில் ஏறிவிட்டால் பற்கள் டைப் அடிக்க ஆரம்பித்துவிடும். சிலர் குழுவில் அவ்வளவாக பேச மாட்டார்கள். ஆனால், ஸ்டேஜில் கலக்கி விடுவார்கள். நான் முதல் ரகம். எனது முதல் prepared speech படு மொக்கையாகிவிட்டது. ஜட்ஜ்களிடமிருந்து ஏகப்பட்ட கமெண்ட்ஸ். ஆனால், அடுத்தடுத்து பங்கு பெற்றதில் ப்ராக்டிஸ் ஆகி, prepared speech-ல் கலக்க துவங்கிவிட்டேன். ஆனால், impromptu? அதில் தேறுவதற்குள் செஷன் நடத்துவதை நிறுத்திவிட்டார்கள். சில மேலிட மாற்றங்களாலும், 'டோஸ்ட் எங்கே?' (பிரட் டோஸ்ட் அல்ல) என்று சில ரவுடி எலிமென்ட்ஸ் கேட்டு டர்ரியல் ஆக்கியதாலும் அதை நிறுத்திவிட்டார்கள். :)

இது போன்ற செஷன்கள் ஒருவரின் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எந்த நிலையில் இருக்கிறது என்று வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை மேம்படுத்தவும் உதவும். கொடுத்திருக்கும் டைம் ஃபிரேமுக்குள் பேசுவதால் டைம் மேனேஜ்மென்ட்டும், மக்களை உங்கள் பேச்சால் கவர யுத்திகள் செய்வதால் பீபிள் மேனேஜ்மென்ட்டும், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உடன் வரும் இலவச இணைப்புகள். ஆகவே, ஒவ்வொரு அலுவலகத்திலும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் போன்ற செஷன்கள் நடத்துவது மிகவும் நன்மைக்குரியது.( அது மட்டுமில்லை, அரை மணி நேரம் ஓபி அடிக்கலாம் பாருங்கள்!). கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், டைம் மேனேஜ்மென்ட், பீபிள் மேனேஜ்மென்ட்; இந்த மூன்றும் இருந்தால் லீடர்ஷிப் ஸ்கில்ஸ் தானாக வந்துவிடும். அப்புறமென்ன, மேனேஜ்மென்ட் ஏணியில் ஏறுமுகம் தான் உங்களுக்கு.

இந்த செஷன்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எந்த மொழியில் உங்களுக்கு கம்யூனிகேட் பண்ண வேண்டுமோ அந்த மொழியில் நடத்தலாம்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்களை அவ்வபொழுது உங்கள் குடும்பத்திலும் நடத்தலாம். படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்களை கதை சொல்லவோ அல்லது எதாவது தலைப்பு கொடுத்தோ பேச சொல்லலாம். வேலைக்கு செல்லும் தம்பதியருக்குள் இதுபோன்ற செஷன்களை நடத்துவது career முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும். (கவனிக்க: மனைவிகள் கணவன்களுக்கு எடுக்கும் செஷன்கள் இதில் கணக்கில் வராது ;) )

டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்ஸ் உங்கள் அலுவலகத்தில் நடத்துவதில்லை என்றால், உடனே சென்று உங்கள் மேனேஜெரிடம் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் பரிந்துரை ஏற்கப்பட்டுவிட்டது என்றால் வருகிற appraisal-ல் இதை போட்டு ஆப்புரைசல் ஆகாமல் பார்த்து கொள்ளலாம். அப்புறமென்ன, நீங்களும் டோஸ்ட்மாஸ்டர் தான்!


பி.கு: பதிவில் ஆங்கில சொற்களை கலந்ததற்காக மன்னிக்கவும். அவற்றிற்கு இணையான தமிழ் சொற்களை அறியாததே காரணம். உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள். அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது. :)

Thursday, April 01, 2010

சுறா புறாவாகி விடுமா?

நான் இளையதளபதியோட தீவிர ரசிகைங்க. அவரோட படம் ரிலீஸ் ஆகுதுனா, அந்த படத்தோட வால்பேப்பெர்ஸ், ஸ்டில்ஸ், பாட்டுனு என் சிஸ்டம்ல டவுன்லோட் பண்ணி வெச்சுப்பேன். சுறா இன்னும் கொஞ்ச நாள்ல ரிலீஸ் ஆக போகுது. சரி, வால்பேப்பெர்ஸ் டவுன்லோட் பண்ணலாம்னு கூகிள்ல 'சுறானு' டைப் பண்ணேன். என் கெட்ட நேரம், சர்ச் ரிசல்ட்ஸ் எல்லாத்துலயும் "சுறா காமெடி சீன்", "சுறா கோர்ட் சீன்"னு இருந்துச்சு. நானும் ஆர்வ கோளாறுலே அந்த லிங்க் ஓபன் பண்ணிட்டேங்க. நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். அதே பார்த்த ஒடனே எங்க 'சுறா' 'புறா'வாகி தியேட்டர் விட்டு பறந்துடுமோனு பயம் வந்துடுச்சு.

அந்த சீன்ல அவர் பண்ணி இருக்கும் அல்டிமேட் காமெடி பார்க்க, இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

எனக்கு அழுவ அழுவையா வருது. :'(