Friday, June 25, 2010

கொசுவத்தி!!

வித்யாவின் திருமணம் ஒரு மாசம் முன்னாடி நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சு. நேத்தியோட, ஒரு மாசம் ஆச்சு அவளுக்கு கல்யாணமாகி. விஷ் பண்ணலாம்னு கூப்ட்டேன்.
நான்: "Congrats Vidi!"
வித்தி: எதுக்கு?
நான்: எதுக்கா? அடிப்பாவி, உனக்கு கல்யாணமாகி 1 மாசம் ஆகிடுச்சு. நானே ஞாபகம் வெச்சுருக்கேன் நீ மறந்துட்ட?
வித்தி: போ ஆசா. என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த கொண்டடுறதுனு 'என்னத்த கண்ணம்மா'கிட்டா.
கொஞ்சம் ஷாக் ஆனாலும், "சரி சரி. உன்னவரும் மறந்துருப்பாரு போல. எதாவது ஸ்பெஷல்லா பண்ணு"னு ஃபோன வெச்சுட்டேன். அடுத்த நாள் அவரிடமிருந்து என்ன ரியாக்ஷன் வந்ததுனு ஆர்வமா கேட்டா, "ஒரு மாசம் தான ஆச்சு? ஒரு வருஷம் ஆகல்ல?"னு கேட்டு டாபிக்க க்ளோஸ் பண்ணிட்டாராம். அவருக்கு அவர் பர்ஸ் தப்ப வேண்டுமென்ற கவலை!
சமையல் கட்டு பக்கமே போகாத வித்தி ஏதேதோ புதுசு புதுசா செஞ்சு அசத்துறாளாம். அவளோட அவர், மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம வாயடைச்சு போயிருக்காராம். விதி வலியது!
வித்திய பத்தி பேசும் போது ஞாபகத்துக்கு வருது. வித்யா கல்யாணத்த பார்த்துட்டு திரும்பி வரும் போது, ரோட்ல ஒரு பலியாட மாலையும், மஞ்சளுமா கூட்டிட்டு போயிட்டு இருந்தாங்க. பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு. இத ஏன் சொல்றேன்னா.. அப்புறமா சொல்றேன்.

*****

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, "கராத்தே கிட்" படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சது. கிளைமாக்ஸ் இந்தியன் டைப்பா இருந்ததாலும், கிளைமாக்ஸ் பைட் இளையதளபதியின் பத்ரியை ஞாபகபடுத்துனதுனாலும் கைதட்டி என்ஜாய் பண்ணேன். :-) ஜேடன் ஸ்மித், என்னம்மா நடிச்சிருக்கான்? அவனது ரியாக்ஷன்ஸ், கிளாஸ்! சிறுவனுக்கு இப்போவே ஸ்டமக் பேக்ஸ் இருக்கு! வில் ஸ்மித் பையன்னா சும்மாவா? நம்ம ஊர் நடிகர்கள் 3 பேக்ஸ், 6 பேக்ஸ் எல்லாம் வெச்சுட்டு விடுற அலப்பறை. ஹும்ம்! ஜாக்கி சானுக்கு வயசாய்டுச்சு. ஆனா, ஒரு ஸ்டன்ட் சீன் பார்த்தப்போ, மனுஷன் இன்னும் இளமையாதான் இருக்கார்னு தோணுச்சு! Hats off, Jackie Sir!

*****

ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து எழுதினேன். வெடித்தது வீட்டில் பூகம்பம். வேற யாரு, என் அருமை தங்கச்சி டீனா தான்.
டீனா: "ஏய், விஜய் பத்தி எழுதி இருக்கியே, என்னிக்காவது என்னை பத்தி எழுதனும்னு தோணுச்சா?"
நான்: "அதான், உன்னை பத்தி டெர்ரர்னு ஒரு பதிவு எழுதி இருக்கேனே?"
டீனா: "அதெல்லாம் தெரியாது, நீ என்னை விஷ் பண்ணி எழுதல"
நான்: "உனக்கு இன்னும் பர்த்டே வே வரலியே?"
டீனா: "அதெல்லாம் தெரியாது, பாரு நீ விஜய்க்கு கேக் எல்லாம் கொடுத்துருக்க (அந்த பதிவுல ஒரு கேக் படம் இணைச்சிருப்பேன்). எனக்கு எதாச்சும் செஞ்சிருப்பியா?"
ஏதோ, நானே என் கையால விஜய்க்கு கேக் செஞ்சு கொடுத்த மாதிரியும், அவளுக்கு நான் இது வரைக்கும் ஒன்னுமே செஞ்சது இல்லைன்ற மாதிரியும் ஏசிட்டிருந்தா. "ஏய், நான் உனக்கு என்ன எல்லாம் செஞ்சுருக்கேன். மறந்துட்டியா?"னு கேட்ட ஒடனே ஒன்னு சொன்னா பாருங்க, அப்படியே ஷாக் ஆய்ட்டேன். "எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ. என்னை பத்தி ஒரு கவிதை எழுதனும். இல்லை, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது"னு சொல்லிட்டு ஃபோன வெச்சுட்டா. கவிதையா? நானான்னு? டெர்ரர் ஆகியிருக்கேன்.

*****

சரியா 1 வீக் முன்னாடி, என் நிச்சயதார்த்தம் முடிந்தது, இனிகோவோட:-). நிச்சயதார்த்தம் அப்போ ரிங் மாட்டி விடுவாங்க இல்ல அப்போ தான் அந்த துயர எண்ணம் எழுந்தது. வேற ஒண்ணுமில்ல, அவர் ரிங் மாட்டும் போது, மேல சொன்னேன் பாருங்க, பலியாடு, அது தேவையில்லாம ஞாபகத்துக்கு வந்துச்சு. என்னடா இது அபசகுனமானு தோணுனாலும், அவர் என் பக்கத்துல அப்படி தான் நின்னுட்டு இருந்தார். போட்டோக்ராபர், எவ்ளோ ட்ரை பண்ணியும் மனுஷன் மொகத்துல தக்ளியூண்டு சிரிப்பு கூட வரல. பாவமா இருந்துச்சுன்னு டீனா சொன்னா. நான் அப்படி என்னதான் பண்ணிட்டேன்? :-(

*****

நிச்சயதார்த்தம் அன்னிக்கு நடந்தது இன்னொரு காமெடி. மேடைல அழகா, பெருசா ஒரு சோபா போட்டிருந்தாங்க. போட்டிருந்த மாலையும், ஜடையும் ரொம்ப வெய்ட்டா இருந்ததால, "எப்படா உக்காருவோம்?"னு இருந்துச்சு. மேடை ஏறுன ஒடனே சோபால ஒக்கார போய்ட்டேன். பக்கத்துல இருந்த சித்தி என் கைய கிள்ளி, "வரவங்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லு"னு சொன்னாங்க. பங்க்ஷன் முடியுற வரைக்கும் ஆளுங்க வந்துட்டே இருந்தாங்க. அதனால வணக்கம் சொல்ற பொசிஷன மாத்தல. இதுக்கு என் சகலை கிண்டலா, "ஏம்மா, ஏதாவது எலெக்ஷன்ல நிக்குறியா?"னு கேட்க, நான் "பெரியவங்க தான் வணக்கம் சொல்ல சொன்னாங்க. வணக்கம் சொல்லிட்டு கைய கீழ போட சொல்லல"னு சொன்னேன். அவர் என்னை ஒரு மார்க்கமா பாத்துட்டு போய்ட்டார்.

Wednesday, June 23, 2010

டூ, மை ஸ்வீட் லிட்டில் பிரதர்!!

Danny Boy!!

நம் சிறு வயது உலகம் இனிமையானது!
நான் என் பொம்மைகளை அடுக்கி வைப்பதும், நீ அதை உடைப்பதும் என அழகாய் இருந்தது!
நீ உடைப்பதற்கென்றே எனக்கு பொம்மைகள் வழங்கப்படும்!
பிறந்தது வெவ்வேறு கருவறைகளாய் இருப்பினும் ஒரு போதும் அதை உணர்ந்ததில்லை நாம்!
பள்ளியில் வம்புச்சண்டைக்கு போய் 'அவன சாத்திட்டேன்க்கா' என்று பெருமை பேசுவது.. வாயால் ஊரையே விலைக்கு வாங்கும் தங்கச்சிகளின் கையை சான்ஸ் கிடைத்தால் முறிப்பது.. என ஒரு குறும்புக்கார தம்பியின் அத்தனை இலக்கணமும் உன்னிடம் இருந்தது!
நீ விட்ட ரீல்களுக்கும், திருட்டுத்தனமாய் அள்ளி தின்ற சர்க்கரைக்கும் அளவே இருந்தது இல்லை!
பெரியவனாய் வளர்ந்தும் அம்மாவை விட்டு பிரிந்தால் கண்ணில் நீர்கோர்த்து விடும் உனக்கு.. அப்பேற்பட்ட என் தம்பி 3 வருட காலம் வெளியூரில் விடுதியில் தங்கி படித்தது எட்டாவது உலக அதிசயமாய் பேசப்பட்டது!
வேலையா? மேற்படிப்பா? என்று சிறிது தடுமாறி, தடம்மாறி மேற்படிப்பிற்க்குச் சென்று, இன்று உனக்கு பிடித்த பத்திரிகை துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறாய்! வாழ்த்துக்கள்!
இன்றைய hi-fi இளைஞனின் அத்தனை இலட்சணங்களுடன் திகழும் உன்னை பார்க்கும்பொழுது பெருமையாய் இருக்கிறது!
எத்தனை வயது கூடினாலும் நீ எனக்கு என்றும் Danny Boy தான்!!


HAPPY BIRTHDAY MY DEAR DANNY BOY!!

HAVE A BLASTING YEAR AHEAD :-)பி.கு:- Danny என்னோட தம்பி. கசின் (அசின் இல்லீங்க ;) ), சித்தி பையன். அவனுக்கு இன்னிக்கு பிறந்த நாள். அதான், அவனை பத்தி ஒரு சிறு குறிப்பு. He is well versed in english (நாங்களும் தான்!). ஒரு இங்கிலீஷ் ப்ளாக் கூட வைத்திருக்கிறான். டைம் இருந்தா பாருங்க. Danny's blog. ஒரு வெளம்பரம் தான். :))

Tuesday, June 22, 2010

நல்வாழ்த்துக்கள்!

எங்கள் இளையதளபதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
வரும் வருடம் தளபதிக்கு இனியதாக அமைய வாழ்த்துக்கள்!! :))


இளையதளபதினா பாட்டு, டான்ஸ் இல்லாமலா? அந்த வகையில், எனக்கு பிடித்த பாடல்கள் உங்களுக்காக. என்ஜாய் பண்ணுங்க!! :))இந்த பாட்டு எனக்கும், தன்ஸ்க்கும் ஃபேவரிட் பாட்டு. முதல் சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங்கின் போது தளபதி தலையசைப்பார் பாருங்கள்! க்யூட்! :))
Specially dedicating to my friend!! :)

இது, என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட். எல்லா ப்ளேலிஸ்டிலும் இருக்கும் பாட்டு. ஒவ்வொரு தடவையும் இந்த பாட்டு ப்ளே ஆனா லூப்ல தான் இருக்கும். அந்த அளவுக்கு வெறித்தனமா பிடிச்ச பாட்டு. :))

நன்றி: கூகிள் மற்றும் யூட்யூப்