Wednesday, April 14, 2010

சித்திரை திருநாள்!

இன்று சித்திரை திருநாள்! கடந்த 4 வருடமாக ஒவ்வொரு சித்திரை திருநாளுக்கும் ஊருக்கு சென்று விடுவதால், ரூமில் பிரெண்ட்ஸோடு கொண்டாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இந்த வருடம், ஓர் இனிய அனுபவமாய் இருந்தது.

நேற்று, ஆபீசிலிருந்து வரும்பொழுதே தன்யா ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, பழக்கூடை எல்லாம் வாங்கி வந்தாள். அவள் வாங்கியதை என்னிடம் காட்டியபொழுது தான் கவனித்தேன் மாம்பழமும், பூவும் மிஸ்ஸிங். அதனால் அவளிடம்,

"பூ வாங்கலையா தன்ஸ்?"
"மறந்துட்டேன் ஆஷா"
"சரி, மாம்பழம்?"
"எனக்குத்தான் மாம்பழம் ஒத்துக்காதே, அதனால வாங்கல."
"உனக்குத்தான ஒத்துக்காது. எனக்கு ஒத்துக்கும் இல்லே?"
"மறந்துட்டேன் ஆஷா"

முறைத்தேன். வசீகராவில் விஜய், வடிவேலு முன் டைப் டைப்பாக முழிப்பது போல் முழியை மாற்றி காட்டினாள். "த பாரு. நீ சும்மா பார்த்தாலே சுருண்டுருவேன். இப்படியெல்லாம், டைப் டைப்பா முழிச்சு கொழந்தைக்கு பயங்காட்டாதே." என்று கூறி எஸ்ஸானேன்.

நல்லவேளை, இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், 'நள்ளிரவு' 5:00 மணிக்கு என்னை 'கனி' பார்க்க எழுப்பிவிட்டாள். கொட்டாவி விட்டுக்கொண்டே கண்ணாடி முன் வைத்திருந்த கனிக்கூடையை பார்த்துவிட்டு மறுபடியும் ப்ளாட்டானேன்.

தன்யா, அலங்காரம் செய்த கனிக்கூடை இதோ:


அனைவருக்கும், என் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்! :)

5 comments:

  1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தங்கமணி,

    நன்றி! :)

    சித்ரா,

    நன்றி! :)

    ReplyDelete
  4. 500

    100

    நகை..

    மிஸ் ஆயிடுச்சே...

    வாழ்த்துகளுங்கோவ்

    ReplyDelete
  5. கார்க்கி,

    நன்றி! 1000 த்தே பாக்காம விட்டுட்டீங்களே? :))

    ReplyDelete