Friday, June 25, 2010

கொசுவத்தி!!

வித்யாவின் திருமணம் ஒரு மாசம் முன்னாடி நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சு. நேத்தியோட, ஒரு மாசம் ஆச்சு அவளுக்கு கல்யாணமாகி. விஷ் பண்ணலாம்னு கூப்ட்டேன்.
நான்: "Congrats Vidi!"
வித்தி: எதுக்கு?
நான்: எதுக்கா? அடிப்பாவி, உனக்கு கல்யாணமாகி 1 மாசம் ஆகிடுச்சு. நானே ஞாபகம் வெச்சுருக்கேன் நீ மறந்துட்ட?
வித்தி: போ ஆசா. என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த கொண்டடுறதுனு 'என்னத்த கண்ணம்மா'கிட்டா.
கொஞ்சம் ஷாக் ஆனாலும், "சரி சரி. உன்னவரும் மறந்துருப்பாரு போல. எதாவது ஸ்பெஷல்லா பண்ணு"னு ஃபோன வெச்சுட்டேன். அடுத்த நாள் அவரிடமிருந்து என்ன ரியாக்ஷன் வந்ததுனு ஆர்வமா கேட்டா, "ஒரு மாசம் தான ஆச்சு? ஒரு வருஷம் ஆகல்ல?"னு கேட்டு டாபிக்க க்ளோஸ் பண்ணிட்டாராம். அவருக்கு அவர் பர்ஸ் தப்ப வேண்டுமென்ற கவலை!
சமையல் கட்டு பக்கமே போகாத வித்தி ஏதேதோ புதுசு புதுசா செஞ்சு அசத்துறாளாம். அவளோட அவர், மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம வாயடைச்சு போயிருக்காராம். விதி வலியது!
வித்திய பத்தி பேசும் போது ஞாபகத்துக்கு வருது. வித்யா கல்யாணத்த பார்த்துட்டு திரும்பி வரும் போது, ரோட்ல ஒரு பலியாட மாலையும், மஞ்சளுமா கூட்டிட்டு போயிட்டு இருந்தாங்க. பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு. இத ஏன் சொல்றேன்னா.. அப்புறமா சொல்றேன்.

*****

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, "கராத்தே கிட்" படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சது. கிளைமாக்ஸ் இந்தியன் டைப்பா இருந்ததாலும், கிளைமாக்ஸ் பைட் இளையதளபதியின் பத்ரியை ஞாபகபடுத்துனதுனாலும் கைதட்டி என்ஜாய் பண்ணேன். :-) ஜேடன் ஸ்மித், என்னம்மா நடிச்சிருக்கான்? அவனது ரியாக்ஷன்ஸ், கிளாஸ்! சிறுவனுக்கு இப்போவே ஸ்டமக் பேக்ஸ் இருக்கு! வில் ஸ்மித் பையன்னா சும்மாவா? நம்ம ஊர் நடிகர்கள் 3 பேக்ஸ், 6 பேக்ஸ் எல்லாம் வெச்சுட்டு விடுற அலப்பறை. ஹும்ம்! ஜாக்கி சானுக்கு வயசாய்டுச்சு. ஆனா, ஒரு ஸ்டன்ட் சீன் பார்த்தப்போ, மனுஷன் இன்னும் இளமையாதான் இருக்கார்னு தோணுச்சு! Hats off, Jackie Sir!

*****

ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து எழுதினேன். வெடித்தது வீட்டில் பூகம்பம். வேற யாரு, என் அருமை தங்கச்சி டீனா தான்.
டீனா: "ஏய், விஜய் பத்தி எழுதி இருக்கியே, என்னிக்காவது என்னை பத்தி எழுதனும்னு தோணுச்சா?"
நான்: "அதான், உன்னை பத்தி டெர்ரர்னு ஒரு பதிவு எழுதி இருக்கேனே?"
டீனா: "அதெல்லாம் தெரியாது, நீ என்னை விஷ் பண்ணி எழுதல"
நான்: "உனக்கு இன்னும் பர்த்டே வே வரலியே?"
டீனா: "அதெல்லாம் தெரியாது, பாரு நீ விஜய்க்கு கேக் எல்லாம் கொடுத்துருக்க (அந்த பதிவுல ஒரு கேக் படம் இணைச்சிருப்பேன்). எனக்கு எதாச்சும் செஞ்சிருப்பியா?"
ஏதோ, நானே என் கையால விஜய்க்கு கேக் செஞ்சு கொடுத்த மாதிரியும், அவளுக்கு நான் இது வரைக்கும் ஒன்னுமே செஞ்சது இல்லைன்ற மாதிரியும் ஏசிட்டிருந்தா. "ஏய், நான் உனக்கு என்ன எல்லாம் செஞ்சுருக்கேன். மறந்துட்டியா?"னு கேட்ட ஒடனே ஒன்னு சொன்னா பாருங்க, அப்படியே ஷாக் ஆய்ட்டேன். "எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ. என்னை பத்தி ஒரு கவிதை எழுதனும். இல்லை, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது"னு சொல்லிட்டு ஃபோன வெச்சுட்டா. கவிதையா? நானான்னு? டெர்ரர் ஆகியிருக்கேன்.

*****

சரியா 1 வீக் முன்னாடி, என் நிச்சயதார்த்தம் முடிந்தது, இனிகோவோட:-). நிச்சயதார்த்தம் அப்போ ரிங் மாட்டி விடுவாங்க இல்ல அப்போ தான் அந்த துயர எண்ணம் எழுந்தது. வேற ஒண்ணுமில்ல, அவர் ரிங் மாட்டும் போது, மேல சொன்னேன் பாருங்க, பலியாடு, அது தேவையில்லாம ஞாபகத்துக்கு வந்துச்சு. என்னடா இது அபசகுனமானு தோணுனாலும், அவர் என் பக்கத்துல அப்படி தான் நின்னுட்டு இருந்தார். போட்டோக்ராபர், எவ்ளோ ட்ரை பண்ணியும் மனுஷன் மொகத்துல தக்ளியூண்டு சிரிப்பு கூட வரல. பாவமா இருந்துச்சுன்னு டீனா சொன்னா. நான் அப்படி என்னதான் பண்ணிட்டேன்? :-(

*****

நிச்சயதார்த்தம் அன்னிக்கு நடந்தது இன்னொரு காமெடி. மேடைல அழகா, பெருசா ஒரு சோபா போட்டிருந்தாங்க. போட்டிருந்த மாலையும், ஜடையும் ரொம்ப வெய்ட்டா இருந்ததால, "எப்படா உக்காருவோம்?"னு இருந்துச்சு. மேடை ஏறுன ஒடனே சோபால ஒக்கார போய்ட்டேன். பக்கத்துல இருந்த சித்தி என் கைய கிள்ளி, "வரவங்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லு"னு சொன்னாங்க. பங்க்ஷன் முடியுற வரைக்கும் ஆளுங்க வந்துட்டே இருந்தாங்க. அதனால வணக்கம் சொல்ற பொசிஷன மாத்தல. இதுக்கு என் சகலை கிண்டலா, "ஏம்மா, ஏதாவது எலெக்ஷன்ல நிக்குறியா?"னு கேட்க, நான் "பெரியவங்க தான் வணக்கம் சொல்ல சொன்னாங்க. வணக்கம் சொல்லிட்டு கைய கீழ போட சொல்லல"னு சொன்னேன். அவர் என்னை ஒரு மார்க்கமா பாத்துட்டு போய்ட்டார்.

5 comments:

 1. //உண்ணவரு//

  அப்படின்னா சாப்பிட்டவருன்னு அர்த்தம். அது உன்னவர்

  // ரோட்ல ஒரு பலியாட மாலையும், மஞ்சளுமா கூட்டிட்டு போயிட்டு இருந்தாங்க. பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு. இத ஏன் சொல்றேன்னா.. அப்புறமா சொல்றேன்//

  ரைட்டு.. சிக்கியாச்சா?

  //இளையதலபதிக்கு//

  ஹலோ இளைய தளபதின்னா சின்ன "ல" போடுவிங்களா??????

  // என்னை பத்தி ஒரு கவிதை எழுதனும்//

  அவங்க பேர எழுதிட்டு பழைய டயலாக்க விட வேண்டியதுதானே?

  //இனிகோவோ//

  இனி கோ தானா??

  மேலவையில சீட் கிடைக்க வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. @Karki,

  //அப்படின்னா சாப்பிட்டவருன்னு அர்த்தம். அது உன்னவர்//
  //ஹலோ இளைய தளபதின்னா சின்ன "ல" போடுவிங்களா??????//

  மாத்திட்டேன்!! :-)

  //ரைட்டு.. சிக்கியாச்சா?//

  ம்ம். :-)

  //அவங்க பேர எழுதிட்டு பழைய டயலாக்க விட வேண்டியதுதானே?//

  ஆமால்ல.. இது தோணாம போச்சே..

  //இனி கோ தானா??//

  ஆமா.. 'கோ' தான் :-)

  //மேலவையில சீட் கிடைக்க வாழ்த்துகள்.. //

  யூ மீன் பார்லிமென்ட் சீட்?? தேங்க்ஸ்!!

  @Chitra,

  Thanks!

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா... சூப்பர்... பலியாடு ரெம்ப ரெம்ப சூப்பர்... அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.... ஹா ஹா ஹா....
  Jokes apart - congrats on your engagement

  I mentioned you in my recent post....hope you don't mind...

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete